முகப்பு
திருநெல்வேலி

அமமுக சார்பில் நல உதவிகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 25 பிப்ரவரி 2019, 9:52 am IST
பகிர்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்டச்செயலர் கல்லூர் இ.வேலாயுதம் தலைமை வகித்தார்.  மாநில அமைப்புச் செயலர் ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட அவைத் தலைவர் பி.ஜெகநாதன் என்ற கணேசன், பொருளாளர் ஏ.பி.பால்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தச்சநல்லூர், பாளையங்கோட்டை, சுத்தமல்லி, பேட்டை  உள்பட பல்வேறு பகுதிகளில் அமமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பும், வேட்டி-சேலை, மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட  உதவிகளும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.