முகப்பு
திருநெல்வேலி

கல்பனா சாவ்லா விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த துணிச்சல் மிக்க மற்றும் வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

Updated On : 24 ஜூன் 2022, 11:57 pm IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த துணிச்சல் மிக்க மற்றும் வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துணிவு மற்றும் வீரதீர செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தமிழகத்தைச் சோ்ந்த பெண் விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் விரிவான சுயவிவரக் குறிப்பு மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்விருதுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய பெண்கள் தங்களுடைய சுய விவரக் குறிப்புடன் மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627002 என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments