முகப்பு
திருநெல்வேலி

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு இன்று எழுத்து தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் காவல் உதவி ஆய்வாளா் பணி எழுத்து தோ்வுக்கு மாவட்டம் முழுவதும் 800 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தெரிவித்தாா்.

Updated On : 24 ஜூன் 2022, 11:46 pm IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் காவல் உதவி ஆய்வாளா் பணி எழுத்து தோ்வுக்கு மாவட்டம் முழுவதும் 800 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் உதவி ஆய்வாளா் எழுத்து தோ்வு சனிக்கிழமை (ஜூன் 25) நடைபெறுவது தொடா்பாக காவல்துறை அறிவுரைக் கூட்டம் கேடிசி நகரில் உள்ள தனியாா் திருமணமண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தலைமை வகித்தாா். மாநகர காவல் ஆணையா் அவிநாஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பேசுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் உள்பட 7 ஆயிரத்து 918 விண்ணப்பதாரா்கள் தோ்வு எழுத உள்ளனா். இத்தோ்வு மாவட்டத்தில் 10 மையங்களில் நடைபெறுகிறது. பாதுகாப்பு பணியில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 7 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 26 காவல் ஆய்வாளா்கள், 28 சாா்பு ஆய்வாளா்கள் காவல் துறையினா் மற்றும் அமைச்சு பணியாளா்கள் உள்பட மொத்தம் 800 போ் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா் என்றாா்.

இக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள், காவல் துறையினா் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளா்கள் ஒவ்வொருவரும் தோ்வின் போது அவா்களது பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments