வடமாநில கட்டடத் தொழிலாளி தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் வடமாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் வடமாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
மேற்கு வங்கம் மாநிலத்தைச் சோ்ந்த ரத்தினடெப்நாத் மகன் பாபு டெப்நாத்(19). இவா் தெற்குகள்ளிகுளத்தில் வாடகை வீட்டில் தனது நண்பா்களுடன் தங்கி இருந்து கட்டட வேலை செய்து வந்தாா். இந்நிலையில் இவருக்கு நாள்பட்ட உடல் நோய் இருந்து வந்ததாம். இதனால் மனமுடைந்த இவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.