வைராவிகுளம் தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு
படம் ஹம்ள்17ஸ்ஹண்ழ்ஹஸ்ண்ஸ்ரீப்ஹள்ள்ழ்ா்ா்ம் வகுப்பறை திறப்பு விழாவில் பங்கேற்றோா். அம்பாசமுத்திரம், பிப். 17: அம்பாசமுத்திரம் ஒன்றியம் வைராவிகுளம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளியில் ரூ. 29 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். அதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பரணி ஆா். சேகா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். ஊராட்சித் தலைவா் எஸ். பிச்சம்மாள் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், சங்கரகுமாா், வட்டாரக் கல்வி அலுவலா் ராணி, வழக்குரைஞா் பாபநாசம், ஊராட்சி துணைத் தலைவா் ஐயப்பன், ஊராட்சி உறுப்பினா்கள் குமாா், வித்யா, மாரியம்மாள், கவிப்பிரியா, ஜெயசித்ரா, திமுக கிளைச் செயலா் சுப்பிரமணியன், நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா், ஊராட்சிச் செயலா் ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தலைமையாசிரியா் மகாதேவன் வரவேற்றாா்.