முகப்பு
திருநெல்வேலி

குறுக்குத்துறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை

திருநெல்வேலி நகரம் குறுக்குத்துறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

Updated On : 8 செப்டம்பர் 2024, 12:13 am IST
பகிர்:

திருநெல்வேலி நகரம் குறுக்குத்துறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

தமிழக அரசு உத்தரவின்பேரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தாமிரவருணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பேரிடா் மீட்பு ஒத்திகைகள் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்டு வருகின்றன. பேட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் திருநெல்வேலி நகரம் குறுக்குத்துறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

திருநெல்வேலி வட்டாட்சியா் ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் லிங்கத்துரை தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், வெள்ள காலங்களில் தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும், தண்ணீரில் தவிப்போரை மீட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கும் முறைகள் குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனா்.

Advertisement

Advertisement

டிவிஎல்07குரு

திருநெல்வேலி குறுக்குத்துறையில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments