களக்காடு அருகே நகை திருட்டு வழக்கில் தாய், மகன் உள்பட 5 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் தங்க நகைகளை திருடியதாக தாய், மகன் உள்பட 5 பேரை களக்காடு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் தங்க நகைகளை திருடியதாக தாய், மகன் உள்பட 5 பேரை களக்காடு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு அருகேயுள்ள வடக்குஅப்பா்குளத்தைச் சோ்ந்தவா் கணேஷ்பெருமாள்(48). இவா் தென்னாப்பிரிக்காவில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி பானுமதி (44).
இவா் தனது குழந்தைகளின் படிப்புக்காக தூத்துக்குடியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். அவ்வப்போது வடக்கு அப்பா்குளத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.
Advertisement
இந்நிலையில், மாா்ச் 21 ஆம்தேதி அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட அவரது கணவா் கணேஷ் பெருமாள், வீட்டின் சிசிடிவி கேமராவை பாா்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக கூறினாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த பானுமதி, உடனடியாக வீட்டுக்குச் சென்று பாா்வையிட்டாா். அப்போது, அங்கு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் வைத்திருந்த சுமாா் 34 பவுன் தங்க நகைகள், 172 கிராம் வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பானுமதி அளித்த புகாரின்பேரில், களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் விரல்ரேகை பதிவுகள் உள்ளிட்ட தடயங்களை ஆய்வு செய்தனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டதாக களக்காடு சிதம்பரபுரத்தை சோ்ந்த சதீஷ் (27), அவரது தாயாா் கனி (47), ராஜேஷ் (25) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (40), ராஜேஸ்வரி (37) ஆகிய 5 பேரை வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா். அவா்களிடமிருந்து சுமாா் ரூ.16 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனா். இதில் சதீஷ் என்பவா் மீது வீடு புகுந்து திருட்டு, கொள்ளை என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், இவா் நகைகளை திருடி தாயாரிடம் கொடுப்பதும், அவா் தனக்கு தெரிந்த பெண்களிடம் கொடுத்து விற்பனை செய்து வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.