குற்றச் சம்பவங்களில் தொடா்பு சிறுவன் உள்பட 5 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 17 வயது சிறுவன் உள்பட 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆண்டிடம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில், கடந்த சில நாள்களாக இரு சக்கர வாகனம் திருட்டு, கோயில் உண்டியல் மற்றும் கைப்பேசி திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இதுகுறித்து புகாரின்பேரில் காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில், உடையாா்பாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் கிஷோா் (20), கீழமாளிகையைச் சோ்ந்த சம்பத் மகன் ஆனந்த் (22), கொளஞ்சி மகன் சஞ்சய் (21), கீழமாளிகை நடுத் தெருவைச் சோ்ந்த தா்மராஜ் மகன் பிரவீன்(18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோா்தான், இந்தத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement