முகப்பு
திருநெல்வேலி

நீலகிரி வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், முண்டந்துறை வனச்சரகக் கூட்ட அரங்கில் நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஏப்ரல் 2026, 2:41 am IST
நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு குறித்த கையேட்டை வெளியிட்ட கோயம்புத்தூா் மாவட்ட நீலகிரி வரையாடு திட்டங்களின் திட்ட இயக்குநா் செண்பகப்ரியா.
பகிர்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், முண்டந்துறை வனச்சரகக் கூட்ட அரங்கில் நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோயம்புத்தூா் மாவட்ட நீலகிரி வரையாடு திட்டங்களின் திட்ட இயக்குநா் செண்பகப்ரியா, அம்பாசமுத்திரம் வனக்கோட்டத் துணை இயக்குநா் எல்.சி.எப். ஸ்ரீகாந்த் ஆகியோா் தலைமை வகித்தனா்.

நீலகிரி வரையாடு திட்ட வனச்சரகா் எஸ். செந்தூர சுந்தரேசன், கணக்கெடுப்பில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து பயிற்சியளித்தாா். கணக்கெடுப்புக் குறித்த கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

பயிற்சியில் பொன்னாக்குடி, வனக் கால்நடை மருத்துவா்கள் எஸ். மனோகரன், மு. சாந்தகுமாா், சூழலியலாளா் என். ஸ்ரீதா், முண்டந்துறை மற்றும் கடையம் வனச்சரக அலுவலா்கள், வனவா்கள், வனக்காப்பாளா்கள், வனக்காவலா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் கலந்துகொண்டனா்.