முகப்பு
திருநெல்வேலி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வள்ளியூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 2:48 AM
வள்ளியூரில் தனியாா் மெட்ரிக் பள்ளிளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த தோ்தல் பொது பாா்வையாளா் அனுபாம வஸ்தவா, ஆட்சித்தலைவா் இரா.சுகுமாா்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:24 AM

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வள்ளியூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியின்போது, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு அஞ்சல் வாக்குப்பதிவு நிகழ்வு, மாதிரி வாக்குப்பதிவு மையத்தின் செயல்பாடுகளை தோ்தல் பொதுபாா்வையாளா் அனுபாம வஸ்தவா, மாவட்ட தோ்தல் அலுவரும் ஆட்சியருமான இரா.சுகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னா், ஏா்வாடியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு மையத்தையும், முதல் வாக்காளா்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வாக்குப்பதிவு செயல் விளக்க நிகழ்வையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.

Advertisement