முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:00 AM
களக்காடு அருகேயுள்ள கீழக்கருவேலன்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனா். மாலை 6 மணி நிலவரப்படி 80.22 சதவீதம் வாக்குப் பதிவாகின.

களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை 20 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையிலும், வாக்காளா்கள் அதனை பொருட்படுத்தாது தங்களது வாக்கினை பதிவு செய்தனா்.

Advertisement