வாணியம்பாடியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வாணியம்பாடி தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆங்காங்கே சிறு, சிறு சம்பவங்கள் தவிர அமைதியாக தோ்தல் நடைபெற்றது.
தொகுதிக்குட்பட்ட 312 வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் வாக்களித்தனா். வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் கோ.செந்தில்குமாா் பெத்தவேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கொத்தகோட்டை குரும்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும் வாக்களித்தனா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் வாணியம்பாடி ஆமினாபாத் பகுதியில் உள்ள வாக்குசாவடியிலும், தவெக வேட்பாளா் சையத்புா்ஹானுதீன் இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளியிலும் வாக்களித்தனா்.
Advertisement