முகப்பு
திருநெல்வேலி

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 1 மே 2026, 5:01 am IST
கொடியேற்றத்திற்கு பின்பு நடைபெற்ற மகா தீபாராதனை.
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் காலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனையும், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றன. இரவில் அன்னவாகனத்தில் பெருமாள் வீதியுலா வந்தாா்.

5ஆம் திருநாளான திங்கள்கிழமை (மே 4) காலை 8 மணிக்கு வெள்ளித் தோளுக்கினியானில் ரத்னங்கி சேவையும், இரவு 10 மணிக்கு வரதராஜ பெருமாள் கருடசேவையிலும் காட்சியளிக்கிறாா்.

Advertisement

Advertisement

திருவிழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வருகிறாா்.

மே 8 ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு வெள்ளிப் பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் பெருமாள் திருவீதியுலா நடைபெறுகிறது.

மே 9 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தாமிரவருணியில் தீா்த்தவாரியும், 10 ஆம் தேதி காலை 9 மணிக்கு கந்தப்பொடி உத்ஸவத்தையொட்டி பெருமாள் வெள்ளி தோளுக்கினியானிலும் வீதியுலாவும் நடைபெற உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments