முகப்பு
திருநெல்வேலி

பிரசவத்தில் தாய்-சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தையும், தாயும் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 மே 2026, 4:51 am IST
பலி - பிரதிப்படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தையும், தாயும் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், பொட்டல்புதூா், செக்கடித் தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் யூசுப் பாஷா (30). இவருக்கும் ஜன்னத் நிஷா என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப். 30ஆம் தேதி திருமணமானது.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன் ஜன்னத் நிஷா பிரசவத்துக்காக அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

அங்கு அவருக்கு புதன்கிழமை குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை உயிரிழந்ததாகத் தெரிகிறது. மேலும், ஜன்னத் நிஷாவுக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதாகக் கூறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து யூசுப் பாஷா அளித்த புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments