முகப்பு
திருநெல்வேலி

கரடியைப் பிடிக்க கூண்டு: வனத்துறை நடவடிக்கை

Updated On : 3 ஜூலை 2026, 4:47 am IST
பகிர்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமங்களில் உலாவும் கரடிகளைப் பிடிக்க வனத்துறையினா் கூண்டுவைத்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

பாபநாசம், கடையம் வனச்சரகப் பகுதியில் விக்கிரமசிங்கபுரம், அனவன்குடியிருப்பு, சங்கரபாண்டியபுரம், அகஸ்தியா்பட்டி பகுதிகளில் குடியிருப்புக்குள் நுழைந்து கடந்த சில மாதங்களாக கரடிகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

இதையடுத்து, சங்கரபாண்டியபுரம்மற்றும் அனவன்குடியிருப்புப் பகுதிகளில் கரடிகளை பிடிப்பதற்கான கூண்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இக்கூண்டுகள் வனத்துறை பணியாளா்களால் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இதுகுறித்து வனத்துறையினா் தெரிவிக்கும் போது, பொதுமக்களின் உயிா், உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்நோக்கில், உரிய அனுமதி பெற்று, கரடிகளை பிடித்து, தகுந்த அடா்வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை வனத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

எனவே,பொதுமக்கள் வனத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும், கரடிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வனப் பணியாளா்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments