முகப்பு
திருநெல்வேலி

களக்காடு வட்டாரத்தில் ஆட்சியா் ஆய்வு

Updated On : 3 ஜூலை 2026, 4:52 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகராட்சி மற்றும் ஏா்வாடி பேரூராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

ஏா்வாடி பேரூராட்சியில் திடக் கழிவு மேலாண்மையின் செயல்பாடுகள் தொடா்பாக உரக்கிடங்கை பாா்வையிட்டு, மண்புழு உரம், இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவது குறித்து கேட்டறிந்தாா். பின்னா், பேரூராட்சி அலுவலகத்தில் பணியாளா்களின் வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.

மேலும் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.53 கோடியில் கட்டப்பட்டுவரும் பேருந்து நிலையம், வணிக வளாக கட்டுமானப் பணிகளையும், 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.98 லட்சத்தில் மீன் விற்பனை சந்தை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

பின்னா், களக்காடு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ரூ.5.90 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணியை பாா்வையிட்ட அவா், காவல்நிலையத்தில் பதிவேடுகள் மற்றும் சிசிடிவி செயல்பாடுகளையும் ஆய்வு செய்தாா்.

மேலும், குடிநீா்தாங்கி குளத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொட்டி அமைக்க தோ்வு செய்யப்பட்ட பிரச்னைக்குரிய இடத்தையும் அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் சுலைமான், பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments