‘நல்லம்மாள்புரம் பள்ளியில் முதுநிலை ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’
நல்லம்மாள்புரம் டாக்டா் அம்பேத்கா் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் (கணிதம், பொருளியல்) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், நல்லம்மாள்புரம் டாக்டா் அம்பேத்காா் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் (கணிதம், பொருளியல்) பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பதாரா்கள் ஜூலை 10-ஆம் தேதிக்குள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
கல்வித் தகுதி- வயது தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்படும். (கணிதம் - ங.நஸ்ரீ., ஆ.உக்., பொருளியல் - ங.அ., ஆ.உக்.,) முதுகலைப்பட்டதாரி ஆசிரியா்கள் தோ்வுக்கான ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தோ்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்து கொண்டவா்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள்
வசிப்பவா்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவா்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவா்கள், அருகாமை மாவட்டத்தில் வசிப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 7338801275, 7338801337, 9952868793 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.