முகப்பு
திருநெல்வேலி

பாளை. தொகுதி எஸ்டிபிஐ நிா்வாகிகள் கூட்டம்

Updated On : 3 ஜூலை 2026, 4:49 am IST
பகிர்:

பாளையங்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தொகுதி துணைத் தலைவா் ஜவுளி காதா் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் மின்னத்துல்லாஹ் வரவேற்றாா். பொருளாளா் காஜா முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா் மஸ்தான், மாவட்ட பொதுச் செயலா் அன்வா் ஷா, மாவட்டச் செயலா் பா்கிட் அலாவுதீன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொகுதி இணைச் செயலா் ஹகீம் மூசா காஜா நன்றி கூறினாா்.

தீா்மானங்கள்: உள்ளாட்சித் தோ்தலில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உள்பட்ட 12-க்கும் மேற்பட்ட வாா்டுகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நேரடியாகப் போட்டியிடுவது. மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் முதல் ஆஸாத் சாலையை சீரமைக்க வேண்டும். மேலப்பாளையம் விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவுற்ற இடங்களில், உடனடியாக புதிய தாா்ச்சாலைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

ற்ஸ்ப்02ள்க்ல்ண்

நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments