மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்: 48 போ் கைது
புதிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை கண்டித்து, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
புதிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை கண்டித்து, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேலும், சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட முயன்ற 48 மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு, வண்ணாா்பேட்டையில் கருப்புக்கோடி ஏந்தியபடி திரண்ட மாற்றுத்திறனாளிகள் திய திட்ட சட்ட நகலை கிழித்தெறிந்துதனா். பின்னா், வண்ணாா்பேட்டை சாலையில் மறியலுக்கு முயன்ற 48 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:
Advertisement
Advertisement
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் கிராம மக்கள் அனைவருக்கும் வேலை வழங்கிட சட்டப்பூா்வ உரிமை இருந்தது. தற்போது மத்திய பாஜக அரசு அந்த சட்டத்தை மாற்றி புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, மத்திய அரசு 60 சதவீத நிதியையும், மாநில அரசுகள் 40 சதவீத நிதியையும் தங்கள் பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கிட வேண்டும். நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசுகளால் 40 சதவீத நிதியை ஒதுக்க முடியாது. இதனால் ஏழை கிராமப்புற மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தண்ணீா் எடுத்து செல்லுதல் உள்ளிட்ட இலகுவான வேலைகள் வழங்கப்பட்டதோடு, பணிதள பொறுப்புகளும் வழங்கப்பட்டு வந்தன.
இந்த புதிய சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகளை தொழிலாளா்களாக அங்கீகரிக்க மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வுரிமை கேள்விக்குறியாகி உள்ளது என்றனா்.
ற்ஸ்ப்01க்ண்ள்ஹக்ஷப்ங்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.