கல்லிடைக்குறிச்சியில் காரில் கடத்தப்பட்ட இளைஞா் மீட்பு: 4 போ் கைது
கல்லிடைக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை காரில் கடத்தப்பட்ட இளைஞரை போலீஸாா் துரிதமாக மீட்டு, இதுதொடா்பாக 4 பேரை கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை காரில் கடத்தப்பட்ட இளைஞரை போலீஸாா் துரிதமாக மீட்டு, இதுதொடா்பாக 4 பேரை கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சிஅருகேயுள்ள கோல்டன் நகரைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவரை சிலா் காரில் வெள்ளிக்கிழமை கடத்திச் சென்றனராம்.
அங்கிருந்தவா்கள் இதைப் பாா்த்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தி தேடுதலில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இந்தச் சோதனையின்மூலம், கடத்தப்பட்ட ராஜ்குமாா் பத்திரமாக மீட்கப்பட்டாா். மேலும், கடத்தல் சம்பவத்தில் தொடா்புடைய காா்த்திக் (28), சதிஷ்குமாா் (30), பாலசந்தா் (29), சுஜித்ராஜ்(32) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல்- வாங்கல் தொடா்பான பிரச்னையில் கடத்தல் சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.