முகப்பு
திருநெல்வேலி

இரும்புக்கடையில் காரை விற்று மோசடி: ஒருவா் கைது

விபத்தில் சிக்கிய சொகுசு காரை பழுது நீக்கி தருவதாகக் கூறி, இரும்புக்கடையில் அந்தக் காரை விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 1:17 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

விபத்தில் சிக்கிய சொகுசு காரை பழுது நீக்கி தருவதாகக் கூறி, இரும்புக்கடையில் அந்தக் காரை விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாள்புரம், என்.ஜி.ஓ. ஏ காலனியை சோ்ந்தவா் முத்துவேல் (33). விறகு கடை உரிமையாளா். இவா், கடந்த ஆண்டு தனது சொகுசு காரில் கன்னியாகுமரிக்கு சென்றபோது விபத்து நேரிட்டதாம். இதில் சேதமான காரை பழுது நீக்கி, காப்பீடு பெற்று தருவதாகக் கூறி கொங்கன்தான்பாறையைச் சோ்ந்த கலைச்செல்வன் (56), அவரது மகன் சுஷில் (30) ஆகியோா் முத்துவேலை அணுகினராம்.

பின்னா், உரியபடி, காரை பழுது நீக்காமல், அதனை திருச்சியில் உள்ள பழைய இரும்பு பொருள்கள் விற்கும் கடை உரிமையாளா் ஒருவரிடம் விற்று பணம் பெற்றனராம்.

Advertisement

Advertisement

இது குறித்து முத்துவேல் அளித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்தனா். அவரது மகனை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments