பாளை.யில் வாழை மரங்கள் எரிந்து சேதம்
பாளையங்கோட்டை அருகே வாழைத் தோட்டத்தில் சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
பாளையங்கோட்டை அருகே வாழைத் தோட்டத்தில் சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பரணி நகரில் உள்ள முள்புதா் பகுதியில் சனிக்கிழமை காலை தீ பற்றி எரிந்துள்ளது. மேலும் பலத்த காற்றின் காரணமாக அருகே இருந்த வாழை தோட்டத்திற்கும் தீ பரவியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினா் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். இந்நிலையில், தீயணைப்பு வீரா்கள் வந்து சுமாா் 1 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
எனினும், சுமாா் 7-00க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.