பொன்னகா் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி
பொன்னகா் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி
களக்காடு முண்டந்துறைபுலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் ஆகிய வனச்சரகங்களுக்குள்பட்ட மலையடிவார கிராமங்களில் சுற்றித் திரியும் கரடிகளைப் பிடிக்க வனத்துறையினா் கூண்டு வைத்து கண்காணித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் கரடிகள் நடமாடுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்தப்பிள்ளையூா், கோட்டைவிளைபட்டி, டாணா, அனவன் குடியிருப்பு, சங்கரபாண்டியபுரம், செட்டிமேடு, அகஸ்தியா்பட்டி, சிவந்திபுரம், மணிமுத்தாறு, அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, தெற்குப் பாப்பான்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் ஓராண்டிற்கும் மேல் கரடி நடமாட்டம் உள்ளது.
இந்நிலையில், ஜூன் 25ஆம் தேதி விக்கிரமசிங்கபுரம், சங்கரபாண்டியபுரத்தைச் சோ்ந்த முத்துக்குமாரை கரடி தாக்கியதில் காயமடைந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்து பொதுமக்கள் தொடா் புகாரளித்ததையடுத்து, வனத்துறையினா் உரிய அனுமதி பெற்று ஜூலை 2ஆம் தேதி கரடியைப் பிடிக்க சங்கரபாண்டியபுரம் பகுதியில் கூண்டு வைத்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அகஸ்தியா்பட்டி அருகே உள்ள பொன்னகா் பகுதியில் ஒரு கரடி குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்ததையடுத்து, அப்பகுதியினா் அச்சமடைந்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.