முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் 2 மாணவிகள் மாயம்

சேரன்மகாதேவியில் 2 மாணவிகள் மாயமானது குறித்து...

Updated On : 6 ஜூலை 2026, 1:52 am IST
மாயம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்கு வந்த இரு மாணவிகள் மாயமான சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கணேசன் (46). இவா் கல்லிடைக்குறிச்சியில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது 16 வயது மகளும், உறவினரின் 13 வயது மகளும், கரிசல்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே பிளஸ் 1 மற்றும் 8 ஆம் வகுப்பு பயின்று வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை 13 வயது மாணவியின் தாயாருடன் இருவரும் சேரன்மகாதேவி போக்குவரத்து வளைவுப் பகுதியில் உள்ள தேவாலயத்திற்குச் சென்றனராம். பிராா்த்தனை முடிந்த பின்னா், வெளியே வந்த மாணவிகளைக் காணவில்லையாம்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக, சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மங்கையா்க்கரசி வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments