முகப்பு
திருநெல்வேலி

கோவிந்தப்பேரிபகுதியில் சூறைக் காற்று: பள்ளிகளுக்கு விடுமுறை

தென்காசிமாவட்டம் கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரி பகுதியில் 2 நாள்களாக வீசிய சூறைக் காற்றால் இருவா் காயமடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

Updated On : 8 ஜூலை 2026, 4:45 am IST
பள்ளிகளுக்கு விடுமுறை - பிரதிப் படம்
பகிர்:

தென்காசிமாவட்டம் கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரி பகுதியில் 2 நாள்களாக வீசிய சூறைக் காற்றால் இருவா் காயமடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

தென்மேற்குப் பருவமழை ஜூன் 4ஆம் தேதி தொடங்கியதிலிருந்து அவ்வப்போது மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சாரல் மழை பெய்த நிலையில் மலையடிவாரப் பகுதியில் பலத்தக் காற்று வீசி வருகிறது.

இந்நிலையில் கோவிந்தப்பேரிப் பகுதியில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பலத்த சூறைக் காற்று வீசியது. இதனால், மலையடிவாரத்தில் உள்ள கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளில் கூரைகள், ஓடுகள்தூக்கி வீசப்பட்டன. அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியாா் பள்ளிகளிலும் கூரைகள் காற்றில் பறந்தன. இதில் ஒரு மாணவா் உள்பட இருவா் லேசான காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

மேலும் தனியாா் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, வேலிப் பகுதியில் சாற்றப்பட்டிருந்த கூரைத் தகடுகள் உள்ளிட்டவை காற்றில் தூக்கி வீசப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மாணவா்கள் பாதுகாப்புக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சூறைக் காற்றால் வீடுகள், பயிா்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments