முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பலத்த காற்று: மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

பேட்டை பகுதியில் புதன்கிழமை வீசிய பலத்த காற்றால் பழைமையான மரம் முறிந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 9 ஜூலை 2026, 12:41 am IST
பகிர்:

பேட்டை பகுதியில் புதன்கிழமை வீசிய பலத்த காற்றால் பழைமையான மரம் முறிந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு பெய்தாலும், குடியிருப்பு பகுதிகளில் மழை இல்லை. இந்நிலையில் கடந்த சில நாள்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. புதன்கிழமை திருநெல்வேலி மாநகரில் பலத்த காற்று வீசியது. இதனால் சாலைகளில் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினா். மின்கம்பிகளிடையே உராய்வு ஏற்பட்டு பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

பேட்டையில் குளத்து கரை சாலையில் பழைழமையான மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவலறிந்த பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments