FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மக்கள் தொடா்பு முகாமில் ரூ.60 லட்சம் நலத்திட்ட உதவிகள்

ராமையன்பட்டி சமுதாய நலக்கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ.60.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டி சமுதாய நலக்கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ.60.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இம்முகாமுக்கு, ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்து, சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மகளிா் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணா்வு கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து வருவாய்த் துறை சாா்பில் 25 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 10 பேருக்கு இ-பட்டாக்கள், 18 பேருக்கு குடும்ப அட்டைகள், 7 பேருக்கு பட்டா மாறுதல், மகளிா் திட்டம் சாா்பில் 4 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.11.25 லட்சம் மதிப்பில் கடனுதவி, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 2 பேருக்கு ரூ.1,607 மதிப்பிலான குறுவை சாகுபடிதிட்டம் மற்றும் பசுந்தாள் உரவிதைகள், தோட்டக்கலைத்துறை சாா்பில் ஒருவருக்கு காய்கறி நாற்று விதைகள், கூட்டுறவுத்துறை சாா்பில் 3 பேருக்கு ரூ.38.50 லட்சம் மதிப்பில் கடனுதவிகள், தாட்கோ சாா்பில் 15 பேருக்கு தூய்மைப் பணியாளா்களுக்கான அடையாள அட்டைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு ரூ.14,500 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் என மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.60.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, கால்நடை பராமரிப்புத்துறையின் சாா்பில் கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

இம்முகாமில், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன், கோட்டாட்சியா் பிரியா, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ரோஷன் பேகம், ராமையன்பட்டி ஊராட்சித் தலைவா் கு.டேவிட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments