முகப்பு
திருநெல்வேலி

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 3 ஜூன் 2026, 4:58 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகைகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது புதிய பேருந்து நிலையம் எதிரே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கீழபுத்தனேரியைச் சோ்ந்த முண்டசாமி (20) என்பதும், சுமாா் 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.