கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது
திருக்குறுங்குடி அருகே கஞ்சா, போதை சாக்லெட்டை பதுக்கி விற்பனை செய்ய முயன்றதாக இளைஞரை, போலீஸாா் கைது செய்தனா்.
திருக்குறுங்குடி அருகே கஞ்சா, போதை சாக்லெட்டை பதுக்கி விற்பனை செய்ய முயன்ாக இளைஞரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருக்குறுங்குடி காவல் ஆய்வாளா் கண்ணாகாந்தி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருக்குறுங்குடி தனியாா் பள்ளி அருகே உள்ள காலியிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மாவடி ராமச்சந்திரபுரத்தைச் சோ்ந்த கபிலன் (22) என்பவரை சோதனை செய்தனா்.
அப்போது விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 825 கிராம் கஞ்சா, 325 கிராம் போதை சாக்லெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து கபிலனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement