முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில் தீ

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டது. செவிலியா்களின் துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

Updated On : 11 ஜூன் 2026, 4:48 am IST
பகிர்:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டது. செவிலியா்களின் துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

இம்மருத்துவமனையின் 2 ஆவது தளத்தில் இருதய நோயாளிகளுக்கான வாா்டு உள்ளது. இங்கு ஆக்சிஜன் வாயு செல்லும் குழாய்கள் உள்ளன. இதில் திடீரென புதன்கிழமை லேசான தீ விபத்து ஏற்பட்டதாம்.

செவிலியா்கள் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனா். எனினும் புகைமூட்டம் பரவியதால் அந்த வாா்டில் இருந்த நோயாளிகள் மற்றொரு வாா்டுக்கு மாற்றப்பட்டனா். செவிலியா்கள், ஊழியா்களின் நடவடிக்கையால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

Advertisement

Advertisement