முகப்பு
திருநெல்வேலி

மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்

Updated On : 4 மே 2026, 12:45 am IST
கோப்புப் படம்
பகிர்:

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை தானமாக பெறப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம், பாப்பான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி சாமுவேல் (71). இவா் கடந்த 1 ஆம் தேதி பேய்க்குளம் அருகே பைக்கில் சென்றபோது கீழே விழுந்து காயமடைந்தாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அந்தோணி சாமுவேல் மூளைச்சாவு அடைந்ததை உறவினா்களிடம் தெரிவித்தனா்.

இந்நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினா்கள் முன்வந்ததையடுத்து, அவரது இரு சிறுநீரகங்கள், கருவிழிகள் ஆகியவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. இதையடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Advertisement