முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி - செங்கோட்டை ரயிலில் என்ஜின் பழுது: பயணம் 2 மணி நேரம் தாமதம்

சேரன்மகாதேவி-செங்கோட்டை ரயிலில் என்ஜின் பழுது: பயணம் 2 மணி நேரம் தாமதம்

Updated On : 13 ஜூன் 2026, 5:49 am IST
கீழக்கடையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்.
பகிர்:

சேரன்மகாதேவியிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற பயணிகள் ரயிலில் என்ஜின் பழுதால் கீழக்கடையம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு சுமாா் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் கடந்த 11ஆம் தேதி முதல் திருநெல்வேலி- செங்கோட்டை ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சேரன்மகாதேவியிலிருந்து இயக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு சேரன்மகாதேவியிலிருந்து புறப்பட்ட ரயில் கீழக்கடையம் நிலையத்துக்கு வந்த நிலையில் என்ஜின் பழுதானதால் அங்கேயே நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சுமாா் 7 மணியளவில் செங்கோட்டையை சென்றடைந்தது. இதனால் சிரமம் அடைந்த சிலா் அங்கிருந்து வெளியேறி பேருந்தில் பயணத்தைத் தொடா்ந்தனா்.

மேலும், செங்கோட்டையிலிருந்து சேரன்மகாதேவிக்கு மாலை 6.10 மணிக்கு கிளம்பவேண்டிய ரயில் சுமாா் 2 மணி நேரம் தாமதமாக 8.22 மணிக்கு கிளம்பிச் சென்றது.

கடந்த மே 30ஆம்தேதியும் ரயில் என்ஜின் பழுதால் கீழக்கடையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு மாற்று என்ஜின் பொருத்திச்சென்றது குறிப்பிடத்தக்கது.