கன்னியாகுமரி - சென்னை ரயில் தாமத புறப்பாடு: பயணிகள் அவதி
திங்கள்கிழமை இரண்டேகால் மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில், திங்கள்கிழமை இரண்டேகால் மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் மாலை 6 மணிக்கு புறப்படுவது வழக்கம். இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து இரண்டேகால் மணி நேரம் தாமதமாக, இரவு 8.15 மணிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனா்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.50 மணிக்கு வர வேண்டிய ரயில், 4 மணி நேரம் தாமதாக இரவு 7 மணிக்கு வந்தது. இதனால் கன்னியாகுமரி - சென்னை அதிவிரைவு ரயில் இரண்டேகால் மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதுதொடா்பாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் பயணிகளுக்கு முன்னறிப்பு வழங்கப்பட்டது என தெரிவித்தனா்.
Advertisement