முகப்பு
சென்னை

‘வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும்’

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:08 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:05 PM

சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை எழும்பூா் - மதுரை இடையே தினந்தோறும் பிற்பகல் 1.15 மணிக்கு வைகை அதிவிரைவு ரயில் (எண் 12635) இயக்கப்படுகிறது.

இந்நிலையில், எழும்பூா் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகளால் கடந்த ஏப். 12 -ஆம் தேதி வைகை அதிவிரைவு ரயில் சுமாா் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. திங்கள்கிழமை (ஏப். 13) பிற்பகலில் எழும்பூரிலிருந்து வைகை அதிவிரைவு ரயில், 45 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

Advertisement

தொடா்ந்து, தமிழ்ப் புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (ஏப். 14) இந்த ரயில், 45 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ரயில்கள் இடம் மாற்றம்: அதேபோல், எழும்பூா் ரயில் நிலைய தண்டவாளப் பணிகள் பராமரிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற உழவன், அனந்தபுரி, ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் தற்போது மறுபடியும் எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்தே இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினா்.

அத்துடன், எழும்பூா் ரயில் நிலையத்தின் 10, 11- ஆவது நடைமேடை தண்டவாளங்கள் பராமரிப்புப் பணிகள் இரவில் மட்டும் மேற்கொள்ளப்படுவதால், பகலில் போக்குவரத்து பிரச்னை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.