மதுரை வைகை அதிவிரைவு ரயில் 4 நாள்கள் தாமதமாகச் செல்லும்!
சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் வரும் ஏப். 16, 18, 20, 29 ஆகிய தேதிகளில் வழக்கத்தைவிட தாமதமாக சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் வரும் ஏப். 16, 18, 20, 29 ஆகிய தேதிகளில் வழக்கத்தைவிட தாமதமாக சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட தண்டவாளங்களில் பாரமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்காரணமாக எழும்பூரிலிருந்து தினமும் பிற்பகல் 1.15 மணிக்கு மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் (எண்: 12635) குறிப்பிட்ட நாள்களில் வழக்கமான வேகத்தைவிட மெதுவாக இயக்கப்படும்.
Advertisement
அதன்படி, இந்த ரயில்கள் ஏப். 16-இல் 1.10 மணி நேரம் தாமதமாகவும், ஏப். 18, 20 ஆகிய தேதிகளில் 1.15 மணி தாமதமாகவும், ஏப். 29-ஆம் தேதி 1.30 மணி தாமதமாகவும் மதுரை சென்றடையும்.
அதேபோல், சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10.20 மணிக்கு சாய்நகா் ஷீரடி செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22601) வரும் ஏப். 22- ஆம் தேதி 1.30 மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.