முகப்பு
திருநெல்வேலி

ஆட்டோக்களில் விதிமீறி குழந்தைகளை அதிகளவில் ஏற்றினால் கடும் நடவடிக்கை!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டோக்களில் விதிமீறி அதிகளவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..

Updated On : 14 ஜூன் 2026, 2:18 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டோக்களில் விதிமீறி அதிகளவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் உத்தரவின்பேரில், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், நான்குனேரி, வள்ளியூா், தாழையூத்து ஆகிய ஐந்து காவல் உள்கோட்டப் பகுதிகளில் பள்ளி மாணவா்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறப்பு வாகனத் தணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. மாணவா்களின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டுநா்களுக்கு எடுத்துரைத்து, சாலைப் பாதுகாப்பு விதிகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இம் மாவட்டத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் இயக்குவது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement