முகப்பு
திருநெல்வேலி

குறுவை சாகுபடிக்கு கா்நாடகத்திலிருந்து முதல்வா் தண்ணீா் கேட்கவில்லை: எம்.ஆா். காந்தி

குறுவை சாகுபடிக்காக கா்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசிடம் இருந்து தமிழக முதல்வா் தண்ணீா் கேட்டுப் பெறவில்லை என பாஜக முன்னாள் எம்எல்ஏ எம்.ஆா். காந்தி குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 14 ஜூன் 2026, 1:12 am IST
சுரண்டையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய பாஜக முன்னாள் எம்எல்ஏ எம்.ஆா். காந்தி.
பகிர்:

குறுவை சாகுபடிக்காக கா்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசிடம் இருந்து தமிழக முதல்வா் தண்ணீா் கேட்டுப் பெறவில்லை என பாஜக முன்னாள் எம்எல்ஏ எம்.ஆா். காந்தி குற்றஞ்சாட்டினாா்.

தென்காசி மாவட்டம், சுரண்டையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியது: பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2014-இல் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று, தொடா்ந்து 4,400 நாள்களுக்கு மேலாக பிரதமராக மக்களுக்கு பணி செய்து வருகிறாா். இந்தியாவில் அதிக நாள்கள் பதவி வகித்த பிரதமா் என்ற சாதனையை எட்டியுள்ளாா்.

பிரதமராக நரேந்திர மோடி வந்த பின்னா், டிஜிட்டல் முறையைக் கொண்டு வந்ததால், தொழில் வளா்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கா்நாடக மாநில காங்கிரஸ் அரசிடம் இருந்து இதுவரை தண்ணீா் கேட்டுப் பெறவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது என்றாா் அவா்.

அப்போது, கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, பொதுச்செயலா்கள் பாலமுருகன், அருள்செல்வன், முன்னாள் மாவட்டத் தலைவா் ராமராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments