மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை
மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை
மேட்டா் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தண்ணீா் திறக்கப்படவில்லை.
மேட்டூா் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம்தேதி தண்ணீா் திறப்பது வழக்கம். அணையின் நீா்மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிா்நோக்கி குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படும். நடப்பு நீா்பாசன ஆண்டில் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாததால், மேட்டூா் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 79.56 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 540 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்கு குடிநீா் தேவைக்காக 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 41.52 டி.எம்.சியாக உள்ளது.
Advertisement
Advertisement
Water has not been released from Mettur Dam for Delta irrigation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.