10 நாள்களில் மேட்டூர் அணைக்கு கபினியின் உபரி நீர்: நீர்வளத் துறை எதிர்பார்ப்பு
கேரள மாநிலத்தில் தொடரும் மழை காரணமாக கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது குறித்து...
கேரள மாநிலத்தில் தொடரும் மழை காரணமாக கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால் அடுத்த 10 நாள்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்துவரும் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தின் உள்ள கபினி அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 15,198 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கபினி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 65 அடி உயரம் கொண்ட கபினி நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 48.35 அடியாக உயர்ந்துள்ளது. 19.52 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையில் 10.42 டிஎம்சி இருப்பு உள்ளது.
நீர் வரத்து இதே நிலையில் நீடித்தால் பத்து நாள்களில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்க வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கபினி உபரி நீர் காவிரி திறக்கப்பட்டால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Surplus water from Kabini expected to reach Mettur Dam in 10 days: Water Resources Department
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.