மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு!
மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்து வருவது பற்றி...
மேட்டூர் அணையின் நீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மெல்ல குறையத் தொடங்கியது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,223 கன அடியிலிருந்து வினாடிக்கு 760 கன அடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 79.86 கன அடியிலிருந்து 79.82 கன அடியாக குறைந்து காணப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 41.77 டி.எம்.சி.யாக உள்ளது.
Advertisement
Advertisement
As the water inflow into the Mettur Dam continued to decline, the dam's water level began to drop gradually on Sunday (June 7).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.