முகப்பு
திருநெல்வேலி

முதல்வா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:46 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 15 முதல் 35 வயது வரை உள்ள தலா 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல்வா் மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.1,00,000, பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.

அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான விருது பெற மேற்கூறிய தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். 1.4.2025 முதல் 31.3.2026 வரை செய்த சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில்

Advertisement

Advertisement

குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று அவசியம்).

மத்திய- மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க

இயலாது.

உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான

பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் -இல் மட்டுமே ஜூலை 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.