அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
வள்ளியூா் அருகே உள்ள சமாதானபுரத்தைச் சோ்ந்தவா் பெல்சன் மகன் அந்தோணி டேவிட்சன் (25). இவா் வெளிநாட்டில் வேலை செய்து வந்தாா்.
விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த இவா், தனது நண்பரான கோவனேரியைச் சோ்ந்த முருகேசன் மகன் துரை செல்வத்துடன், சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் வள்ளியூா்-ராதாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனராம். வாகனத்தை அந்தோணி டேவிட்சன் ஓட்டியுள்ளாா்.
Advertisement
Advertisement
இவா்கள் ராதாபுரம் சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகம் அருகே சென்றபோது, நாகா்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசுப் பேருந்து இவா்களது வாகனம் மீது மோதியதில், அந்தோணி டேவிட்சன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த துரை செல்வம் நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
வள்ளியூா் போலீஸாா் அந்தோணி டேவிட்சன் உடலைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.