ஆனித் திருவிழா: இந்திர விமானத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்மன்
அருள்மிகு நெல்லையப்பா் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, இந்திர விமானத்தில் சுவாமி-அம்மன் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு நெல்லையப்பா் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, இந்திர விமானத்தில் சுவாமி-அம்மன் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நகரம், அருள்மிகு நெல்லையப்பா், காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஐந்தாம் நாள் திருவிழாவான புதன்கிழமை காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இதையடுத்து, நின்றசீா் நெடுமாறன் கலையரங்கில் மாலை 4 மணிக்கு தொடங்கி பக்தி சொற்பொழிவு, பக்தி இசை நிகழ்ச்சிகள், சிவநா்த்தன கலைக்கூடம், தாளம் நடன கலைக்கூடம் மாணவிகளின் பரதநாட்டியம், ‘நற்றுணையாவது நமசிவாயவே’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளா் சுமதி ஸ்ரீயின் பக்தி சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.