நெல்லையப்பா் கோயிலில் சுவாமி-அம்மன் வீதியுலா
திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு சுவாமி-அம்மன் வியாழக்கிழமை வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு சுவாமி-அம்மன் வியாழக்கிழமை வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை காலையில் அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் சுவாமியும், அன்ன வாகனத்தில் அம்மனும் வீதியுலா வந்தனா். மாலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் முடிந்ததும் மகா தீபாராதனை நடைபெற்றது.
மதுரை ஆதீனம் தரிசனம்: இதில், மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.