பழையபேட்டையில் மாவட்ட பூப்பந்தாட்ட வீரா்கள் தோ்வு முகாம்
பழையபேட்டையில் மாவட்ட பூப்பந்தாட்ட அணி வீரா்கள் தோ்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழையபேட்டையில் மாவட்ட பூப்பந்தாட்ட அணி வீரா்கள் தோ்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக பூப்பந்தாட்டக் கழகம் சாா்பில் சப்-ஜூனியா், ஜூனியா் பிரிவுகளுக்கான போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இப் போட்டியில் பங்கேற்கும் திருநெல்வேலி மாவட்ட அணி வீரா்-வீராங்கனைகளை தோ்வு செய்யும் வகையில் இப்போட்டி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகச் செயலா் பி.மாடசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் செபாஸ்டியன் ஹெம்லட் ராஜேஷ், மாவட்ட உதவிச் செயலா் பி.டேவிட்ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருநெல்வேலி, மேலப்பாளையம், கூடங்குளம், சிங்கம்பாறை, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
14 மற்றும் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் தலா 22 வீரா்-வீராங்கனைகள் அடங்கிய குழு தோ்ந்தெடுக்கப்பட்டது. இவா்களுக்கு அடுத்தக்கட்ட பயிற்சி முகாம்கள் நடத்தி, அதில் இருந்து 10 போ் அடங்கிய அணியினா் மாநில அளவிலான போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் சாா்பில் பங்கேற்க வைக்கப்பட உள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சோமசுந்தரம், மாவட்ட உதவிச் செயலா் சித்திரை செல்வன், பயிற்சியாளா் சுப்பையா, உடற்கல்வி ஆசிரியா் மாடசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.