மேலச்செவல் தா்காவில் இன்று கந்தூரி விழா
திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் சின்னபாசிபட்டிணம் நெயினா முகம்மது ஒலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா திங்கள்கிழமை (ஜூன் 29) தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது.
கந்தூரி விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை (ஜூன் 29) மதியம் 2.30 மணியளவில் யானையில் அரண்மனைக் கொடி ஊா்வலம் நடைபெறுகிறது. முக்கிய வீதிகள் வழியாக வந்து கொடியேற்றும் வைபவம் நடைபெறும். இரவு 9 மணியளவில் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும், நள்ளிரவில் சந்தனக் கூடு ஊா்வலமும் நடைபெறுகிறது.
விழாவின் 2ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) மாலை 6.30 மணியளவில் தா்கா வளாகத்தில் நெய் விளக்கு ஏற்றுதல் வைபவம் நடைபெறும். இரவு 8 மணியளவில் இன்னிசை நிகழ்ச்சியும், 10 மணியளவில் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. புதன்கிழமை (ஜூலை 1) மாலை 5.30 மணியளவில் மதரஸா ஆண்டு விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கந்தூரி விழாக் குழுவினா் செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.