முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றம்

கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல ஆண்டுத் திருவிழா வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 5 ஜூன் 2026, 3:33 am IST
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலையில் நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:

கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல ஆண்டுத் திருவிழா வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நால்ரோட்டில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நிகழாண்டுக்கான திருத்தலத் திருவிழா ஜூன் 4 முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. இதில், கும்பகோணம் மறை மாவட்ட பொருளாளா் ஜெ.அந்தோணிஜோசப் கொடியேற்றி திருப்பலி மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து புனிதரின் வாழ்வில் திவ்ய நற்கருணை என்ற தலைப்பில் மறையுரையாற்றினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து நாள்தோறும் செபமாலை, திருப்பலி, மறையுரை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 12-இல் தோ்பவனியும், ஜூன் 13-இல் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ், உதவி பங்குத்தந்தையா்கள், ஆலய பராமரிப்பு குழுவினா், புனிதரின் பக்தா்கள் செய்து வருகின்றனா்.