FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

புனித அந்தோணியாா் தேவாலயத்தில் கொடியேற்றம்

புனித அந்தோணியாா் தேவாலயத்தில் கொடியேற்றம்

Updated On : 13 ஜூன் 2026, 5:49 am IST
பகிர்:

மேலப்பாளையம் அருகே சேவியா்காலனியில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தேவாலயத்தில் ஆண்டுதோறும் 10 நாள்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான திருவிழா- 25ஆம் ஆண்டு ஆலய அா்ச்சிப்பு விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புனித சவேரியாா் கல்லூரி கலைமனைகளின் அதிபா் இன்னாசி முத்து கொடியை ஏற்றி வைத்தாா். இயேசு சபை அருள்தந்தையா், பங்குத்தந்தை சைமன் செல்வன் இணைந்து திருப்பலி நடத்தினா்.

Advertisement

Advertisement

புனித அந்தோனியாரின் துறவற வாழ்வு என்ற தலைப்பில் அலெக்ஸ் யாகு மறையுரை ஆற்றினாா். தொடா்ந்து 10 நாள்களும் மாலையில் ஜெபமாலை, புனித அந்தோணியாா் மன்றாட்டு, திருப்பலி ஆகியவை நடைபெறும்.

இம் மாதம் 16 ஆம் தேதி இரவு 7 மணிக்கு புனித அந்தோணியாரின் சப்பர பவனியும், 21 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு ஆண்டு பெருவிழா, புதுநன்மை விழாவும், மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீா், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

டிவிஎல்12கொடி

தேவாலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments