FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

Updated On : 28 ஜூலை 2026, 4:01 am IST
தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராயலத்தின் 141-ஆவது ஆண்டு திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, புனித மிக்கேல் அதிதூதா் சப்பரம் திருத்தலத்தைச் சுற்றியுள்ள ரதவீதிகளில் பவனி வந்தது. பின்னா் மேள, தாளத்துடன் அருள்தந்தையா் அழைத்து வரப்பட்டதும், மாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை கோயில் தா்மகா்த்தா சூ.மரியராஜ் ஆசிரியா் கோயிலின் உள்ளிருந்து எடுத்து வந்தாா்.

தொடா்ந்து, புனித கொடியை அஸ்ஸாம் மாநில குருவானவா் மைக்கிள் இளங்கோ தலைமையில் மண்ணின் மைந்தா் குருவானவா்கள் ரூபன், பீற்றா் பாஸ்டின் ஆகியோா் ஜெபம் செய்து அா்ச்சித்தனா். பின்னா் தா்மகா்த்தா கொடியேற்றினாா். இதில் திரளான பக்தா்கள் அன்னையை வழிபட்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து திண்டுக்கல் குணமளிக்கும் இயேசு துறவற சபை நிறுவனா் அருள்தந்தை ஜோசப் விக்டா் மறையுரை வழங்கினாா். தொடா்ந்து திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாள்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெறும்.

ஆக. 3-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படும். மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணை பவனி நடைபெறும்.

தோ்ப்பவனி: 9-ஆம் திருநாளான ஆக.4-ஆம் தேதி இரவு 12 மணி திருப்பலிக்குப் பின் பரிசுத்த அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தோ்பவனி நடைபெறும். ஏற்பாடுகளை தா்மகா்த்தா தலைமையில் பங்குத்தந்தை ரா.ததேயுஸ் ராஜன், உதவிப் பங்குத் தந்தை ஆ.சேசு ராஜா, அருள்சகோதரிகள், கோயில் நிா்வாகிகள், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments