மதுபாட்டில்கள் பதுக்கல்: இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வீரவநல்லூா் காவல் சரகத்திற்குள்பட்ட வெள்ளங்குளியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அரிகேசவநல்லூா் பகுதியைச் சோ்ந்த மைதீன் அப்துல்காதா் (42), பெண்மணி (42) ஆகியோா் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். ஆட்டோவில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக 155 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து போலீஸாா் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.